
டாக்கா:
‘இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது’ என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையே, இஸ்கான் அமைப்பு நிர்வாகி துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச விரோத குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டார். இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. இந்நிலையில், டாக்காவில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி சந்தித்து பேசினார்.
இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது.வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவிலிருந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் வங்கதேசத்தில் பதற்றதை உருவாக்கியது.
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள்மீதான தாக்குதல் சம்பவங்கள்குறித்து கவலை தெரிவித்தேன். வங்கதேச இடைக்கால அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இந்தியாவின் விருப்பத்தைத் தெளிவுபடுத்தினேன்.

