ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

சிட்னி:

ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டனாகப் பேட் கம்மின்ஸ்-க்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ஹசில்வுட், குணமடையாததால் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்-க்கு இந்தத் தொடரில் ஓய்வு வழங்கவில்லை.

இலங்கை எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள்,

ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், நாதன் மெக்ஸ்வீனி, பியூ வெப்ஸ்டர், நாதன் லியோன், மிட்செல் ஸ்டார்க், கூப்பர் கோனோலி, டாட் மர்பி, மாட் குஹ்னேமன், சீன் அபோட், ஸ்காட் போலண்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *