Sri Kengaiyamman Temple Festival: மஹா கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

சென்னை நீலாங்கரை பாண்டியன் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருகோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  நீலாங்கரை கிராம ஊர் பொதுமக்கள் சார்பில்   வெகுவிமர்சியாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

சென்னை நீலாங்கரைபாண்டியன் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருகோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  நீலாங்கரை கிராம ஊர் பொதுமக்கள் சார்பிலும் ஆலய மற்றும் கும்பாபிஷேகம் தலைமை அர்ச்சகர் அசோக் தலைமையிலும்  வெகுவிமர்சியாக நடைபெற்றது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் காலை மங்கள இசை, கன்யா பூஜை, ப்ரம்மச்சாரி பூஜை, சுஹாசினி பூஜை, தம்பதி பூஜை, அஸ்சுவமேதை பூஜை, செய்து யாகம் வலத்து சோடஷ மஹா திபாராதனை யுடன் விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால மஹா பூர்ணாஹீதி யாத்ராதானம், கடம் புறப்பாடுடோடுநடைபெற்றது.

அதனைதொடர்ந்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனிதநீரானது பொதுமக்கள்மீது தெளிக்கபட்டது. மேலும் காலை அன்னதானம் வழங்கபட்டு மதியம் மஹா அபிஷேகம் ஆராதனை சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.

மாலை உமா மகேஸ்வரனுக்கு திருக்கல்யாணம்  இரவு ஸ்ரீ கெங்கையம்மன் விஸ்வரூப அலங்காரத்தில் ஒய்யாலி திருநடனம் வீதி உலா நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *