Sri Guru Bagavan Dhakshinamoorthy Temple: அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது!

Advertisements

அகரம் கோவிந்தவாடி இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது ‘குரு கோவில்’ என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் ஆலயம்.

கோவிந்தவாடி என்பது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். மேலும் இக்கிராமம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கோவிந்தவாடியில் அமைந்துள்ள கைலாசநாதர் தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

பிரம்மாவின் மானசீகப் புதல்வர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்கிற நான்கு முனிவர்களும் வேதம், ஆகமம், சாத்திரம், புராணம் முதலான ஞான நூல்கள் பலவற்றையும் முறைப்படிக் கற்றவர்கள். இம்முனிவர்கள் கல்வி வேள்விகளில் வல்லவர்களாகத் திகழ்ந்தும் உண்மைத் தத்துவத்தை உணரவில்லை.

உண்மையை தத்துவத்தை உணரவில்லை. உண்மையை அவர்களுக்கு உணர வைக்க ஈசன் திருவுளம் கொண்டார். அதற்கான காலம் கைகூடியது. அம்பிகை பார்வதியாகப் பிறந்து தவமியற்றிய பொழுது,இறைவனும் கயிலை மலைச்சாரலில் கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக வீற்றிருந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசம் செய்தார்.

இடக்காலை மடித்து உட்கார்ந்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து, வலக்கரத்தினால் சின்முத்திரை காட்டி, உண்மை நிலை எது என்பதை உணர்த்தினார். பாதத்தின்கீழ் உள்ள முயலகன் என்னும் அசுரன் அஞ்ஞானம் என்னும் அறியாமையின் சின்னம். சின்முத்திரை தத்துவத்தை அனைவரும் அறிந்து அதன்வழி நிற்கவே, ஆலயங்களில் தெற்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்த நவக்கிரகங்களுள் இடம்பெறும் குருபகவான் என்கிற வியாழன் கிரகம்  இவர் தான்.

அவ்வியாழனே இவரைப் பூஜித்ததால்தான் பிரகஸ்பதி என்கிற தேவகுரு தகுதிக்கு உயர்ந்தார்.எனவேதான் மவுன குருவாகிய தட்சிணாமூர்த்தியே ஆதிகுருவாக விளங்குகிறார். தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாகவிளங்குகிறது ‘குரு கோவில்’ என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் ஆலயம். இங்கு மூலவராக வீற்றிருந்து அருள்மழை பொழியும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி, குரு பலம் கூடுகிறது.

தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுதான். ஒரே விமானத்தின் கீழ் தனித்தனி சன்னிதிகளில் தெற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் கயிலாசநாதரும் வீற்றிருந்து அருள்பாலிப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு. சன்னிதியில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் கயிலாசநாதரும் வீற்றிருந்து அருள்பாலிப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு.

காஞ்சிபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர்  தூரம் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *