Sri Ashtabujakara Perumal Temple: கோவிலுக்குக் குதிரை ஒன்றை தனமாக வழங்கிய பக்தர்!

Advertisements

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர் ஒருவர் கோவிலுக்கு குதிரைஒன்றை தனமாக வழங்கினார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் என்றாலே கோவில் நகரமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரத்தில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவில்.இக்கோவிலில் பேய் ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இருவரால் மங்களா சனம் செய்யப்பெற்று 108 திவ்ய தேசங்களில் 44 வது திவ்ய தேசமாக விளங்கி வருகிறது.

இத்திருக்கோவிலில் வரும் 26 ஆம் தேதி கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ளதை ஒட்டிப் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குளக்கரை அருகே புதியதாகச் சுவர் அமைக்கப்பட்டு அச்சுவரில் பெருமாளின் தசா அவதாரமான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், கிருஷ்ணன், கல்கியெனப் பத்து அவதாரம் சிற்பங்கள் ஆஞ்சநேயர், கருட ஆழ்வார் உள்ளிட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு பக்தர் ஒருவரால் குதிரை ஒன்று அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.கே.பி.சந்தோஷ் குமார் அவர்களிடம்  தனமாக வழங்கினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *