Speaker Om Birla:உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம்..அதிரடி உத்தரவு!

உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின்போது எந்தக் கோஷங்களையும் எழுப்பக் கூடாது.

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மக்களவை உறுப்பினராக ஒரு வாரத்திற்கு முன் பாராளுமன்றத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பின்போது உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். உறுதி மொழி எடுத்தபின் ஜெய் ஹிந்த், ஜெய் அரசமைப்பு போன்று கோஷம் எழுப்பினர். திமுக எம்.பி.க்கள் பலர் கருணாநிதி வாழ்க, பெரியார் வாழ்க, முக ஸ்டாலின் வாழ்க, உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர்.

ஹைதராபாத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்றுக் கடைசியில் ‘ஜெய் பாலஸ்தீனம்’ எனக் கோஷமிட்டார். எம்.பி.க்கள் பலர் பாரத் மதா கி ஜேயெனக் கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின்போது எந்தக் கோஷங்களையும் எழுப்பக் கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக் கூடாது. உறுதி மொழிக்கான படிவத்தின் முன்பாகவும், பின்பாகவும் எந்த வார்த்தைகளையும் சேர்க்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *