Sivagangai:124 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது!

Advertisements

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸ்காரர் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி சென்றனர்.

திட்டுமலை காளி கோவில் சென்றபோது அங்கு நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை அய்யனார் கோவில் செல்லும் பாதையில் ஓட்டிச் சென்றனர்.

தொடர்ந்து அவர்களை விரட்டிச் சென்றபோது வாகனம் செல்லப் பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தைக் கைப்பற்றிய போலீசார் அந்தப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பாதரக்குடி அய்ய னார் கோவில் செல்லும் மண் ரோட்டில் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ எடையுள்ள, 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

பின்னர் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்த வாகனம்குறித்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாநகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் சோதனை நடந்தது.

இதில ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த ஆந்திரா மாநிலம் மக்காவரப்பள்ளம் ஜி நகரம் துர்கா ராவ், அல்லூர் அண்ணாவாடு காலனி சித்தம்பள்ளி சண்டிபாபு, கிழக்கு கோதாவரி வெக்கவ ரம் அபிலேஷ் வர்மா, கிருஷ்ணலங்கா விஜயவாடா சுபாஷ், விசாகப்பட்டினம் பக்கனபாலம் வித்யாசாகர் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமி ருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் உள்பட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றிக் குன்றக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிடிபட்டவர்களில் வித்யாசாகர் என்பவரின் தந்தை ஆந்திர மாநில காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *