
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள, ‘சைரன்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக 50 வயது மதிக்கத் தக்க நபராக நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், போலீஸ் அதிகாரியாக மிரட்டலான வேடத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லராக வெளியாகி உள்ள சைரன், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, முதல் நாளே 3.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தான் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இவர் நடித்த அகிலன், இறைவன், என அடுத்தடுத்து படங்கள் தோல்வியைச் சந்தித்த நிலையில்… தற்போது மீண்டும் சைரன் படத்தின் மூலம் அழுத்தமான காம்பேக் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.
அதேபோல் இப்படத்தில், கோமாளி படத்திற்கு பின்னர் யோகி பாபு உடன் ஜெயம் ரவி இணைந்து நடித்துள்ள காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பக்காவான ஆக்சன் காட்சிகள், சென்டிமென்ட், திரில்லிங், என அனைவரும் ரசிக்கும் படியான ஒரு காம்போ ட்ரீட்டாக வெளியாகி உள்ளது சைரன் எனப் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
கடந்த வாரம் வெளியான லால் சலாம், லவ்வர், ஆகிய படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ‘சைரன்’ படத்திற்கும் 800க்கும் ஏற்பட்ட திரையரங்குகள் கிடைத்துள்ளது. அதே போல் இப்படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதாலும்… வசூல் அதிகரிக்க கூடும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


