
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை.
சினிமா உலகிலேயே வெகுசில நடிகைகள் மட்டுமே தங்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பார்கள். அந்த வரிசையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு என்றைக்குமே தனி இடம் உள்ளது.

கன்னட மொழியில் இவர் நடிப்பில் வெளியான யூ ட்ரன் படத்தில் இவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக ஃபிலிம் ஃபேர் விருதுகளை இந்தப் படம் பெற்றுத் தந்தது.
இவர் தமிழில் விக்ரம் வேதா, மாறா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் விட்னஸ் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து அட்டகாசப்படுத்தியிருந்தார்.
தனது இன்ஸ்டாகிராமில் தனது நடவடிக்கைகளைப் பகிர்ந்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது மெக்கானிக் ராக்கி படத்தின் புரோமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதைப் பகிர்ந்துள்ளார்.
மெக்கானிக் ராக்கி படம் நேரடி தெலுங்குப் படம். இந்தப் படத்தின் கதாநாயகனாக விஷ்வாக் சென் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் மீனாட்சி சௌத்ரியும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள்பின் தொடருகின்றனர்.
தான் நடித்து வரும் நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள மெக்கானிக் ராக்கி படத்தின் புரோமோஷனில் ஈடுபட்டபோது, மிகவும் கவர்ச்சியான உடையில் காணப்பட்டார். அதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவரின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


