Shraddha Kapoor:இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை மிஞ்சிய பிரபல நடிகை!

இன்ஸ்டாகிராமில் இந்திய அளவில் அதிகம் பின்தொடர்பவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

சென்னை:தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் ‘ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

தற்போது, இந்திய அளவில் அதிக நபர்களால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடரப்படும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகை ஷ்ரத்தா கபூர் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 3-வது இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர்.

இன்ஸ்டாகிராமில் இந்திய அளவில் அதிகம் பின்தொடர்பவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி (270 மில்லியன்) முதல் இடத்திலும், நடிகை பிரியங்கா சோப்ரா (91.8 மில்லியன்) இரண்டாவது இடத்திலும், ஷ்ரத்தா கபூர் (91.6 மில்லியன்) தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக நான்காவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி (91.3 மில்லியன்) மற்றும் ஐந்தாவது இடத்தில் நடிகை ஆலியா பட் (85.2 மில்லியன்) என அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *