Share Market:புதிய உச்சம் தொட்ட உள்நாட்டுப் பங்குச் சந்தைகள்!

Advertisements

மும்பை: வரலாறு காணாத அளவில், 84 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டது.

உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் இன்று (செப்.,20) இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று வர்த்தக நேர முடிவில் 83,184.8 புள்ளிகளுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்து உயர்வை நோக்கிச் சென்றது. காலை 10:50 மணியளவில் 921.69 புள்ளிகள் உயர்ந்து 84,106 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்டது. இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் ஐடிடி சிமெண்டேஷன் பங்குகள் 17 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோல் ஐசிஐசிஐ பங்குகள் தொடர்ந்து 5 நாட்களாக உயர்வைச் சந்தித்துள்ளது.

அதேபோல், தேசிய குறியீட்டு எண் நிப்டி நேற்றைய வர்த்தக நேர முடிவில் 25415.8 ஆக இருந்த நிலையில், இன்று காலை 11.25 மணியளவில் 25.701.40 ஆக வர்த்தகமாகின.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *