பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு தொடக்கம்!

கிா்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26ஆவது உச்சிமாநாடு இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமா் மோடி உஸ்பெகிஸ்தானில் இருந்து கிா்கிஸ்தானுக்கு நேற்று சென்றார். மாநாட்டையொட்டி, பிரதமா் மோடி ரஷ்ய மற்றும் சீன அதிபா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ரஷ்ய அதிபா்கூடான சந்திப்பில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வா்த்தகம் உள்ளிட்டவை குறித்துப் பேச வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *