Senthil Balaji:நான் வருகிற வரை காத்திருக்க வேண்டாம்.. செந்தில் பாலாஜி கிரீன் சிக்னல்..!

Advertisements

சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு தரப்பு காத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்று அல்லது அடுத்த வாரம் வழக்கில் முக்கிய உத்தரவுகள் வரும் வாய்ப்புகள் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு உறுதியாக ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவில்லை? உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு பென்ச் ஒவ்வொரு மாதிரி முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த முறை அமலாக்கத்துறையை கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

எத்தனை நாள் உள்ளே வைத்து இருப்பீர்கள் என்று அமலாக்கத்துறையை கேட்டுள்ளனர். செந்தில் பாலாஜி இதனால் எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை. கீழ் கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே வாக்குமூலம் வாங்கப்பட்டுவிட்டது. இனி இதில் அவர் சாட்சியங்களை எப்படி மாற்ற முடியும். இனி அவரை உள்ளே வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதனால் செந்தில் பாலாஜி எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை. தீர்ப்பு எந்தப் பக்கமும் வரலாம்.

காத்திருக்கும் அரசு; இப்படிப்பட்ட நிலையில்தான் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு தரப்பு காத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர் வந்ததும்.. அவரையும் சேர்த்துக்கொண்டு அமைச்சரவையை மாற்றலாம். இப்போது மாற்றினால்.. பின்னர் மீண்டும் மாற்ற வேண்டி இருக்கும். அவர் சில நாட்களில் வந்துவிடுவார். அதுவரை காத்து இருக்கலாம் என்று ஸ்டாலின் நினைப்பதாகக் கூறப்படுகிறது. ”

நம்பிக்கை: செந்தில் பாலாஜி விரைவில் வரலாம். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களைத் தாமதம் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்கமாட்டார். ஆனால் ஸ்டாலின் அவருக்காகக் காத்து இருக்கிறாரா? அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை? சீனியர்கள் சிலர் வேலை பார்க்கவில்லை என்று புகார் உள்ளது. இதை எல்லாம் ஆய்வு செய்வதால்.. தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி மெசேஜ்: இப்படிப்பட்ட நிலையில்தான் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி.. நான் வரும் வரை காத்திருக்க வேண்டாம். அமைச்சரவை பணிகளைச் செய்யுங்கள். என்னால் எந்த விதமான பணிகளும் தடைபட வேண்டாம், என்று கூறியுள்ளாராம்.

இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை.. செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சி அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் மூத்த தலைவர்கள் நாளைச் சென்னையில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் இதையடுத்து அவசர மெசேஜ் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் நாளை அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *