
பாஜக பற்றி அவதூறாகப் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கரனுக்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை தொடர்புமில்லை என்று பாஜக தலைவர் செல்வகணபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதுவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் செல்வகணபதி புதுவை மக்களால் ஒதுக்கப்பட்டு ஏற்கப்படாத நபரான முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அவருக்குத் தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்று கூறிய அவர்காங்கிரஸ் கட்சியில் அவர் என்னவாக இருக்கிறார் என்று முதலில் அவர் விளக்க வேண்டும் என்றார்.
சோனியாகாந்தி, ராகுல்காந்தியை கூடச் சந்திக்க அவருக்கு அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. அவரைச் சந்திப்பதை தவிர்க்கின்றனர் என்றும் இவரால் புதுச்சேரிக்கு என்ன லாபம் என்று கேள்வி எழுப்பினார்.பாஜக வெற்றி நிச்சயிக்கப்பட்ட வேற்றி. 400 பாராளுமன்ற தொகுதியில் வென்று மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்று கூறிய செல்வகணபதி எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கர் பாஜகவை பற்றித் தவறான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் பாஜகவை சேர்ந்தவரும் அல்ல உறுப்பினரும் அல்ல எனவே அவருக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
பாஜகவை சேர்ந்தவர்தான் வேட்பாளராக நிற்பார்கள். சுயேட்சை எம்.எல்.ஏ பாஜகவை சேர்ந்தவர் இல்லை அவரை நம்பியும் இந்த ஆட்சி இல்லை. அவருக்குப் பாராளுமன்ற உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தது அவரது தவறு என்று சுட்டி காட்டிய பாஜக தலைவர் செல்வ கணபதி பாஜகவை சேர்ந்த 4 பேரைத் தேர்ந்தெடுத்து வேட்பாளராக அனுப்பியுள்ளோம். அதில் ஒருவரை தலைமை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
பாஜகவை பற்றி அவதூறாகப் பேசியதால். பாஜக சார்பில் நடைபெறும் கூட்டங்களில் வரும் காலங்களில் சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கனை சேர்த்துகொள்ள மாட்டோம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


