School Student : மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.!! புதிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை!

Advertisements

அனைத்து அரசு பள்ளிகளிலும் பாட வகுப்புகள்(பீரியட்கள்) அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7 வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இனி நடப்பு கல்வியாண்டு முதல் 8 வகுப்புகளாக நடைபெறும் எனப் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் பாட வேளை அதிகரிப்பு

பள்ளிகளில் இதுவரை நடைபெற்று வந்த 7 பாடவேளை இனி 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கூடுதலாகப் பாடங்களைக் கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாகப் புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலை 9 மணி முதல் 9.15 மணிவரை அசெம்பிளி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து (பீரியட்கள்) முதல் பாட வேளை 9. 15 முதல் 10:00 மணி வரையும், இரண்டாவது பாடவேளை 10 மணி முதல் 10 45 மணிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய பாடவேளை என்ன.?

10 .45 முதல் 10 .55 மணிவரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாகக் காலை 10.55 முதல் 11. 40 வரை (பீரியட்கள்) மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையாக 12. 25 முதல் 1:30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1மணி நேரம் 5 நிமிடம் உணவு இடைவேளை

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1:30 முதல் 2. 10 மணிவரை ஐந்தாவது பாட வேளையும், 2. 10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் (பீரியட்கள்) நடைபெறும் எனவும், இதற்கு அடுத்ததாக 2. 50 முதல் 3 மணிவரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் 45 நிமிடம்- மதியம் 40 நிமிடம்

மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7 வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் எனக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் காலை நேரத்தில் ஒரு பாட பிரிவின்(பீரியட்கள்) நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் எனப் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *