SBI: கடனைத் செலுத்தவில்லையென்றால் வீடு தேடிவரும் சாக்லேட்டுகள்!

Advertisements

வாடிக்கையாளர்கள் பெற்ற கடனை, சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்குச் சாக்லேட்டுகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ”கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளா்களுக்கு தொலைபேசிமூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், சில்லறை கடன் வாங்குபவர்களுக்குத் திருப்பிச் செலுத்தும் தேதியை நினைவூட்ட ஒரு புதிய வழியைச் சோதனை செய்ய உள்ளோம்.

கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடும் கடன் பெற்றவர், வங்கியின் நினைவூட்டல் அழைப்பிற்கு பதிலளிக்க மாட்டார். அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளா்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவா்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

எனவே அவர்களை அவர்களது சொந்த வீடுகளில் முன்னறிவிப்பின்றி சந்தித்து தனிப்பட்ட முறையில் சாக்லேட்டுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துவதே சிறந்த வழியாகும். இந்த முறைக்கு இதுவரை, வெற்றி விகிதம் அதிகமாக உள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள், அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை முறையாக இணைத்துவிடுவோம். 4 முதல் 5 மாதங்கள் சோதனை முறையில் இதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரெபோ விகிதங்கள் உயர்வால், வட்டி விகிதங்களுடன் கடன்தொகை மற்றும் சில்லறைக் கடன்கள் அதிகரித்து வருகிறது. எஸ்பிஐ யின் சில்லறை கடன், ஜூன் 2023 காலாண்டில் ரூ.10,34,111 கோடியிலிருந்து 16.46% அதிகரித்து ரூ.12,04,279 கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த கடந்தாண்டை விட 13.9% வளர்ச்சியடைந்துள்ளது. வங்கியின் இந்தக் கடன் வளர்ச்சிக்கு, சில்லறை கடன்களே பெரும் பங்கு வகிக்கிறது.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *