பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் சேனல்களில் பல்வேறு அரசியல் கட்சித் சார்ந்த தலைவர்கள் குறித்து கண்ணா பின்னானு கழுவி ஊத்தி தினமும் அதை வீடியோ வெளியிட்டு வருகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது, அரசுக்கு எதிராகவும், காவல் அதிகாரிகளுக்கு எதிராகவும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து பேசி வந்தார்.
இதையடுத்து, பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவரது குண்டர் சட்டத்தை கடந்த மே மாதம் ரத்து செய்ததையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சவுக்கு சங்கர் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும், வழக்கறிஞருமான மகாலட்சுமி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். ”சவுக்கு” இணையதளத்தில் என்னை பற்றி அவதூறாக கருத்துகளை வெளியிட்டு வந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை எழும்பூரில் உள்ள நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி சிவசக்தி, பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடி உத்தரவிட்டார். பெண்களை துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் பிரிவு 4, ஐபிசி 509 ஆகிய பிரிவுகளில் சவுக்கு சங்கருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் அவகாசமும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
2008 – DVAC ஆடியோ விவகாரம் தொடங்கி, 2022 – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மே 2024 – கைது, 2024 – கஞ்சா வழக்கு, செப்டம்பர் 30, 2026 – 3 ஆண்டு சிறையில் வந்து நிற்கிறது. ஆக புழல் சிறையில் சவுக்கு அடைக்கப்பட்டு கலி திண்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

