அதிமுகவை அடகு வைத்த எடப்பாடி.. 1000 கோடியை சுருட்ட பிளான்..!

தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வழக்கமாக திமுக மீதே பாய்ந்து விமர்சிக்கும் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமியையும்  புது புதுசான ரூட்டுல அவரை கடுமையாக வார்த்தைகளால் வெச்சு செஞ்ச கதை குறித்து  பார்க்கலாம்.

திமுக கொள்கை கட்சி என்று கூறிக்கொண்டு இப்போதுவரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தைகூட முன்னெடுத்ததில்லை. தேர்தல் வரும்பொழுது அவதூறுகளையும் ஆபாசங்களையும், பெண்களை மையப்படுத்திய ஆபாசமான பிரச்சாரங்களை உருவாக்குவதே திமுகவின் அன்றாட வேலை.

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கும் பொழுதும் திமுகவினர் அதுபோன்றுதான் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாகவும், அவர் இருக்கும் பொழுது எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை . சட்டசபையிலேயே ஒரு பெண் என்றும் பாராமல் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் என்று எல்லாருக்குமே தெரியும். இப்போது உதயநிதி ஸ்டாலின் பெண்களை நோக்கிய, தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கிய பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறார்.

கடந்த 5 வருட அவர்களது ஆட்சியை சொல்லி ஓட்டு கேட்டது கிடையாது, அப்படி ஓட்டு கேட்டும் இந்த முறை அவர்களுடைய கூட்டணி மற்றும் பண பலத்தை மக்கள் தூக்கியெறிந்து விட்டார்கள். இது போன்ற ஆபாசமான பேச்சுக்களை மக்களும் குறிப்பாக கொங்கு மண்டல மகளிரும் தூக்கி எறிவார்கள்..

இதில் ஒரு வருத்தமான செயல் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் விஜய் குறித்து தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திமுகவுடன் இணைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு 41 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்ற கட்சி இன்று 10 சதவீதம் ஓட்டாக இருக்கிறது. ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து விலகி விட்டார்கள்.

2026 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 15 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணியில் பாமக மட்டும் இல்லாவிட்டால், அதிமுகவால் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது. பாமக இல்லாவிட்டால், எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியாது.

ஜெயலலிதா விசுவாசிகள் வெளியே சென்றுவிட்டதால், இன்று அதிமுகவில் இருப்பது 2 பேர்தான். ஒன்று எடப்பாடி பழனிசாமி. இன்னொருவர் அவரது மகன் மிதுன். மிதுனுக்கு இந்த கட்சியை அடமானம் வைத்து விட்டார், மிதுன் அதிமுகவை வழி நடத்துவதால் தான் அங்கு இருக்கக்கூடிய முக்கியமானவர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள்.. அதிமுக என்கிற கட்சியை மறைமுகமாக வழிநடத்துவது மிதுன். அவர்தான் வேட்பாளரை தேர்வுசெய்தார்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தையும் தான்தான் முடிவு செய்கிறார். எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுக-வில் பெரும் சொத்து உருவாக்கி வைத்தனர். அதிமுக டிரஸ்டில் பல ஆயிரம் கோடிக்கணக்கான சொத்து, பணம் இருக்கிறது. இதனை அபகரிக்க மகன் மிதுனை கொண்டுவந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே வேலுமணி, தங்கமணி ஒதுக்கப்பட்டு விட்டனர்.

அன்றைய காலக்கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வுசெய்ய சசிகலாவையே வெளியே அனுப்பினார்கள். இதற்கு வேலுமணி, தங்கமணி, சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் கடினமாக வேலை செய்தனர். ஆனால், சீட்டில் உட்கார்ந்தவுடன் அவர்களையும் தூக்கி வீசிவிட்டார், தென்மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக அதிமுக வலுவிழந்து விட்டது” என்று நேரடியாகவே விமர்சித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *