தவெக MLA – க்களுக்கு இலவச கார்.! கோடிகளில் சம்பள உயர்வு.! அதிரடி அறிவிப்பு.!

தமிழக அரசியலில் இப்போது ஒரு ஹாட் டாபிக் விவாதிக்கப்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகிற நிலையில், ‘ஊரான் வீட்டு நெய்யில் உங்களது வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள்’ என்று எதிர்க்கட்சிகளை நோக்கி முழக்கமிட்ட அதே விஜய் அரசாங்கம்… இப்போது தன் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு 71 சதவீத சம்பள உயர்வை வாரி வழங்கியுள்ளது. ‘இது யாருடைய பணம் சிஎம் சார்?’ என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பின்னணியில் என்ன நடக்கிறது? முழு விவரங்களை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.”

திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்னிறுத்தி, பல்வேறு அதிரடி வாக்குறுதிகளுடன் தவெக ஆட்சிக்கு வந்தது. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், அரசின் கடன் சுமை ஏற்கனவே 10 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இந்தச் சூழலில்தான், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த காலங்களைப் பார்த்தால்… 2011-ல் எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.55,000 ஆக இருந்தது.
அதன் பின், 2017-ல் அதிமுக ஆட்சியில் அது ரூ.1,05,000 ஆக உயர்த்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இப்போது காருக்கு ஓட்டுநர், எரிபொருள் செலவு என அனைத்தையும் சேர்த்து… எம்எல்ஏக்களுக்கான மாதச் சலுகை மற்றும் சம்பளம் ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே படியில் 71 சதவீதம் உயர்வு!”

“பொதுப்பணித்துறை அரசுச் செயலாளர் சுந்தரவள்ளியின் அறிவிப்புக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த புதிய சம்பள உயர்வு இந்த மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இந்தத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.

ஆனால், இந்த அதிரடி மாற்றத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.17 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே தமிழக அரசு பல லட்சம் கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, இந்தச் செலவு அவசியமா என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது.

முன்பு தேர்தல் மேடைகளில் பேசிய விஜய், ‘ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் செய்யாதீர்கள்’ என்று முழங்கினார். ஆனால் இன்றைக்கு, மக்கள் வரிப்பணத்தில் எம்எல்ஏக்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்? இது யாருடைய பணம் சிஎம் சார்? என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகின்றன.”

“மக்களின் அடிப்படைத் தேவைகளும், சில தேர்தல் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு இத்தகைய பெருமளவிலான சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாற்று அரசியலைத் தருவோம் என்று களமிறங்கிய தவெக அரசின் இந்த நடவடிக்கை மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *