
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்பட உள்ளது.இதேபோன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 10 விழுக்காடும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடும் போனஸ் வழங்கப்பட உள்ளது.



