அமெரிக்க குடியுரிமைக்காக முன்கூட்டியே குழந்தை பெற முயலும் இந்திய தம்பதிகள்!

Advertisements

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.

இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாகப் பேசிய அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால், “இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது. பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது.

ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 19ம் தேதிவரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே ‘அமெரிக்க குடியுரிமை’ கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சைமூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *