
நடிகை சஞ்சனா திவாரியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
விஜய்யின் வாரிசு பட நடிகை சஞ்சனா திவாரி, நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணிய புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் இளம் நடிகைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் சொல்லவேவேணாம் இளம் நடிகைகளுக்குத் தான் வாய்ப்பு.
அதுவே பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் இளம் நடிகைகளுக்குச் சைடு கதாபாத்திரங்கள் கொடுக்கப்படும். இப்படியாகத் தமிழ் சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் தங்களின் தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களை ஈர்த்து வருகின்றனர். அந்தவகையில் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சஞ்சனா திவாரி.
தெலுங்கு இயக்குநர் தில்ராஜ் இயக்கத்தில் வம்சி தயாரிப்பில் உருவான பிரமாண்ட படம் வாரிசு. விஜய், சரத்குமார், ராஷ்மிகா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு ரிலீசான இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது. இருப்பினும் இப்படம் வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மகளாக நடித்திருப்பார் இளம் நடிகை சஞ்சனா திவாரி. பள்ளி சிறுமியாக நடித்த சஞ்சனா திவாரியை தமிழ் ரசிகர்கள் நோட் செய்ய ஆரம்பித்தனர். யாருப்பா இந்தப் பொண்ணு எனச் சமூக வலைத்தளங்களில் தேடி வந்தனர்.
இளம் நடிகையாக ரசிகர்களை ஈர்க்கும் சஞ்சனா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கிளாமர் உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சஞ்சனா வெகேஷனை என்கை பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


