Roja Selvamani: ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டல்!  

ஆபாச படம் வெளியிடுவதாக ரோஜாவுக்கு மிரட்டல்!

திருப்பதி: ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாகக் கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாகச் சித்ரவதை செய்கின்றனர் எனக் கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:- தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜாமீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவைப் பற்றிப் பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

ஆனால், தெலுங்குப் பெண்கள்மீது தொடர்ந்து தகாத கருத்துகளைத் தெரிவித்து வருபவர்கள்மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை.ரோஜாவை யாரும் பெண்ணாகக் கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *