உக்ரைன் தலைநகர் அருகில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஐந்து அடுக்குமாடி கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


