வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்திய ‘ஏ’ அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள மைதானத்தில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா ‘ஏ’ – பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 49 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும், பர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி 49 ஓவர்களில் 265 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்அவுட்டானது. இதன்மூலம் இந்திய ‘ஏ’ அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



