ஆறே மாதத்தில் தமிழக வளர்ச்சி நாசம் – தவெக ஆட்சி மீது ஸ்டாலின் விமர்சனம்!

இத்தனை ஆண்டுகாலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி எல்லாம் வெறும் ஆறே மாதத்தில் நாசமாகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு தவெக ஆட்சி இருப்பதாகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குடியரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தொழில்துறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய கைடன்ஸ் அமைப்பே வழி தெரியாமல் இருப்பதாகவும், இதனால் பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை கேலியாகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேகதாதுவில் அணையை கட்டியே தீருவேன் எனப் பேசும் கர்நாடகா முதலமைச்சருக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, நமது முதலமைச்சர் மாநில உரிமைகளை நிலைநாட்ட நீதியரசர் குரியன் தலைமையில் நாம் அமைத்தக் குழுவை அரசியல் காழ்ப்புணர்வுடன் கலைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தவெக தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுவதாக விமர்சித்தார். தவெக ஆட்சியில் பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுவதாகவும், விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இத்தனை ஆண்டுகாலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி எல்லாம் வெறும் ஆறே மாதத்தில் நாசமாகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு தவெக ஆட்சி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *