ரூ.400 கோடி ஊழல் – அ.தி.மு.க., புகார்!

Advertisements

சென்னை:

 அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்தார். வந்தவுடனே, மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

2021 முதல் 2023ம் ஆண்டுவரையில் 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், டெண்டர் விதிகளை முறையாகப் பின்பற்றாததால், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள்மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *