
மேஷம்

இன்று முன்னேற்றத்திற்கு உகந்த நாள். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக வெற்றி காண்பீர்கள்.இன்று பணியிடத்தில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் காணப்படும். நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள்.உங்கள் துணையுடன் இன்றைய நாளை இனிமையாகக் கழிப்பீர்கள்.இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.இன்று உங்கள் நிதிநிலையில் வளர்ச்சி காணப்படும். உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும்.இன்று சிறந்த ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.
ரிஷபம்

இன்று நீங்கள் வருத்ததுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும்.இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். திறமையாக பணியாற்ற நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும்.இன்றைய நாள் உங்கள் துணையிடம் கருத்துக்களை பரிமாறுவதற்கு உகந்த நாள் அல்ல. எனவே உங்கள் தொடர்புகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். என்றாலும் உங்களால் அதிகமாக சேமிக்க இயலாது.இன்று செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும். அதிக நீரைப் பருகவும்.
மிதுனம்

இன்று இழப்புகள் ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.உங்களின் சில பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் திறமையோடு முடிப்பதற்கு திட்டமிடல் அவசியம். உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு சிறிது வன்மையாக நடந்து கொள்வீர்கள்.மகிழ்ச்சியை தக்க வைக்க இத்தகைய நடத்தையை தவிர்க்க வேண்டும்.அதிக பொறுப்புகள் காரணமாக அதிக செலவுகள் காணப்படும். தேவையற்ற செலவுகளை கண்காணிக்க வேண்டும்.வயிறு உப்பசம் காரணமாக அவதிப்பட நேரலாம். காரமான மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும். அதிக நீரைப் பருகவும்.
கடகம்

இன்று உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுக்க பயன்படுத்திக் கொள்வீர்கள்.உங்கள் பணி நிமித்தமான பயணம் காணப்படும். அதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் ஒன்றாக செயல்படுவீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.இன்று பண வரவு காணப்படும். இன்று எதிர் காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள்.இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிம்மம்

இன்றைய செயல்களின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுதல் வேண்டும்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையும் சிறந்த திட்டமிடலும் அவசியம்.இன்று அமைதியாக இருக்கவேண்டும். உங்கள் துணையிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பணத்தை சாதுர்யமாக செலவு செய்ய வேண்டும்.ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். என்றாலும் கண்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கன்னி

இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். மற்றவர்கள் தரும் வாக்குறுதிகளை சார்ந்து இருக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் நிறைவேற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.உங்கள் துணையிடம் நீங்கள் உணர்சிவசப்படுவீகள். இதனால் உங்கள் உறவில் அமைதியின்மை காணப்படும்.பண வரவு காணப்பட்டலும் அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.உடல் உழைப்பின் காரணமாக கால் வலி ஏற்படலாம். உடற் பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது.
துலாம்

ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு இன்று சிறந்தது.உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும்.உங்கள் துணையுடன் மோதல்கள் காணப்படும். இருவரும் கவனமாக உரையாட வேண்டும்.இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று கூடுதல் செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.பரபரப்பான பணிகள் காரணமாக தலைவலி அல்லது கால் வலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
விருச்சிகம்

இன்று நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.உங்கள் பணியில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் காணப்படும்.பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு காணப்படும். உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள். இன்று ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.
தனுசு

இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொடர்பாடலை கட்டுப்படுத்த வேண்டும்.அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவரும் நல்ல புரிந்துணர்வையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வீர்கள்.உங்களால் இன்று பணம் சம்பாதிக்க இயலும். என்றாலும் வீணான செலவு காரணமாக நீங்கள் சேமிக்க இயலாது.இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
மகரம்

உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும் ஒரு முடிவை செயலாக்குவதற்கு முன் ஒன்றிற்குஇரண்டு முறை யோசிக்க வேண்டும். தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு காணப்படும். சக பணியாளர்களுடன் சூடான விவாதங்கள் அல்லது அகந்தை உணர்வுகள் தலை தூக்கும். அத்தகைய சூழ்நிலையை நீங்கள் உருவாக்காமல் இருப்பது சிறந்தது.குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.நிதிநிலைமை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகளால் கவலை ஏற்படும்.கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்களில் கவனம் செலுத்துவது சிறந்தது.
கும்பம்

உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற நீங்கள் திட்டமிட வேண்டும். குறைவான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.இருவரும் மனம் திறந்து பேசிக்கொள்வது சிறந்தது.நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று கூடுதல் செலவுகள் காணப்படும்.குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை காணப்படும். அவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.
மீனம்

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மை எண்ணங்கள் காணப்படும். இதன் மூலம் நன்மைகள் நடக்கும்.இன்று பணிகள் மும்மரமாக காணப்படும். என்றாலும் நீங்கள் உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உறவில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படுகின்றது. உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். பூர்வீகச் சொத்து வகையில் எதிர்பாராத பணவரவு காணப்படுகிறது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

