Rohit Sharma: அபராதம்!

ரோஹித் சர்மா வேகமாகக் காரை ஓட்டிச் சென்றதாக அபராதம்!

ரோஹித் சர்மா தனது காரில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வேகமாகக் காரை ஓட்டிச் சென்றதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன், அதிக வேகத்தில் காரை ஓட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 3 விதமான அபராதம்   வழங்கப்பட்டுள்ளன. புனே- முன்பை விரைவு சாலையில் ரோஹித் சர்மா அதிவேகமாகக் காரை ஓட்டியது பதிவாகியுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வதற்காக ரோஹித் சர்மா தனது வீடு இருக்கும் மும்பையிலிருந்து புனேவுக்கு காரில் நேற்று சென்றுள்ளார். அப்போது, ரோஹித் சர்மா தனது காரில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வேகமாகக் காரை ஓட்டிச் சென்றதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், சில நேரத்தில் ரோஹித் சர்மாவின் வேகம் மணிக்கு 215 கி.மீ வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரோஹித் சர்மாவுக்கு ஆன்லைன் மூலம் மூன்று அபராதம்  வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *