Robbery: 6.4 கிலோ தங்கம் திருட்டு!

Advertisements

சென்னை தி.நகரில் இருக்கும் நகை பட்டறையில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 6.4 கிலோ தங்கம் (gold liquid) திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகர், ராமேஸ்வரம் சாலையில் வசிப்பவர் நந்தகுமார் ஜக்தாப். இவருக்கு வயது 43. இவர் தனது வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு தரைத்தளத்தில் நகை கடைகளில் உள்ள பழைய நகைகளை வாங்கி  உருக்கி 24 கேரட் புதிய  நகைகளாக மாற்றிக் கொடுக்கும் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்த பின் சுமார் 11 மணியளவில் பட்டறையை மூடியுள்ளார். ஆனால் உள்ளே பட்டறையில் வேலை செய்யும் 6 தொழிலாளர்கள் மட்டும் இருந்துள்ளனர்.

நேற்று காலைச் சுமார் 08.00 மணியளவில் நந்தகுமார் ஜக்தாப் கடையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த 6 கிலோ 400 கிராம் Gold  Liquid  காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது செய்வதறியாமல் திகைத்துப் போனார். பின்னர் சிசிடிவி பதிவைப் பார்த்தபோது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு உள்ளே அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்துள்ளார். அந்த நபர் அலுவலக கதவின் பூட்டை  உடைக்காமல் உள்ளே வந்து Gold Liquid  ஐ வாட்டர் கேனில் பிடித்துத் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.

உடனே இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகை பட்டறை ஊழியர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த அஸ்வின், உத்தம்(22),  கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல்(18), மகாராஷ்டிராவை சேர்ந்த மாதேவ் (32), ரோகித்(22), அனில்(30), விநாயக்(22) ஆகிய 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *