
பேரிடர் மீட்பு பணிகளுக்குத் தயாரான 15 அடி உயர ராட்சத ரோபோ!
இது அனிமேஷன், ரோபோடிக் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகளுக்குப் பயன்படும் விதமாக மொபைல் சூட் கண்டம் என்ற ஜப்பான் அனிமேஷன் தொடரைத் தழுவி நிறுவனம் இதனை உருவாக்கியிருக்கிறது. வாகனம் மற்றும் ரோபோ என இருவேறு விதமாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மனித எந்திரத்தைப் போல், மேலும் 4 ராட்சத மனித ரோபோக்களை உருவாக்கி அக்டோபர் இறுதியில் காட்சிப்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இவற்றின் விலை தலா 25 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மூன்றரை டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்நிறுவன சிஇஓ ரியோ யோஷிடா கூறுகையில், இது தான் ஜப்பான் என்று சொல்லும் ஒன்றை உருவாக்க விரும்பினேன். அதன் விளைவு தான் ஆர்சாக்ஸ் ரோபோ. இதனைப் பேரிடர் மீட்பு பணி இடங்கள், விண்வெளி பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். இது தவிர, பன்னோக்கு வேலைகளைச் செய்யும் மனித இயந்திரமாகவும், பிற ரோபோக்களுடன் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.



