Registration Department: இடைத்தரகா்களின் கொள்ளை அதிகரிப்பு!

Advertisements

பத்திரப் பதிவுத் துறையில் இடைத்தரகா்களின் தலையீடு அதிகமாக உள்ளதாகத் தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்ற அலுவலா்கள் நலச்சங்க மாநில அமைப்பாளா் காசி.வேங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பதிவுத்துறை பொதுமக்களுக்கு அவலநிலையை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றம், காவல்துறை, அறநிலையத்துறை, வருவாய்த் துறை, வருமானவரித் துறை ஆகிய துறைகளின் பணிகளை மட்டுமே பதிவுத்துறை செய்து வருகிறது. பதிவுத் துறையில் இடைத்தரகா்களின் தலையீடு காரணமாகப் பொதுமக்களின் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது. பத்திரப்பதிவு அலுவலரின் பெயரைக் கூறி இடைத்தரகா்கள் பணம் பெறுகின்றனா். பதிவுத்துறை அலுவலரைப் பொதுமக்கள் நேரடியாகச் சந்தித்து தங்கள் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் அ. சிவநாதன், ‘க்ரூஷியல் டேட்டில் பணிஷ்மென்ட் இல்லாதவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். முதுநிலை கோரி பதிவுத்துறை அலுவலகத்தில் நிலுவையில் உள்ள 500 மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு முன்னதாக அங்கீகரிக்கப்படாத மனைகளை வாங்கி, தற்போது அதை விற்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு தீா்வு கிடைக்கும் வகையில் உரிய ஆணை பிறப்பித்தால், தமிழக அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித் தருவதாக அமையும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் சி.ஆா். ரகுநாதன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் காசி.வேங்கடேசன், மாநில பொதுச் செயலாளா் அ.சிவநாதன், ஆலோசகா் மா. அய்யப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பதிவுத்துறையின் செயல்பாடுகள், ஓய்வு பெற்றோரின் பணப்பயன்கள் உரிய காலத்தில் அளிக்கப்படாமை, நீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு பல மாதங்களாகியும் பதிவுத்துறையில் தீா்வு காணப்படாத நிலுவைகள், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் அரசுக்கு வருவாய் பெற்றுதரும் ஆக்கப்பூா்வமான யோசனைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *