
Real estate Guideline Value
“நிலம் வாங்க காத்திருக்கும் மக்கள்…வழிகாட்டு மதிப்பு உயர்வால் ஏற்படும் சிக்கல்…
சென்னை: Real estate
சமீப காலங்களில் நிறைய அறிவிப்புகள், அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காகப் பத்திர பதிவுத்துறையிலிருந்து வந்த வண்ணம்தான் உள்ளது.
நிலத்தின் வழிகாட்டு மதிப்பு பல்வேறு நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீட்டுமனை வாங்குவோர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கையில் “சதுர அடிக்கு ரூ.300 என்பது மிகச் சாமானியர்கள் வாங்கும் இடங்களாக இருக்கும். சமீப காலங்களில் நிறைய அறிவிப்புகள், அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காகப் பதிவுத் துறையிலிருந்து வந்தவண்ணம் தான் உள்ளது.
இதன் மூலம் புரிவது அரசாங்கத்திற்கு வருமானம் அதிகம் தேவைப்படுகிறது என்பது தான். எந்தெந்த இடங்களில் வருமானத்தை ஈட்டலாமென யோசித்து என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார்கள்” “நிலம் வாங்க காத்திருக்கும் மக்கள்…வழிகாட்டு மதிப்பு உயர்வால் ஏற்படும் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

