Ramya Pandian: பஞ்சு மிட்டாய் நிற கோட் சூட்டில் போட்டோ ஷூட்!

பஞ்சு மிட்டாய் நிற கோட் சூட்டில் போட்டோ ஷூட்!

நடிகை ரம்யா பாண்டியன் பஞ்சு மிட்டாய் நிற கோட் சூட்டில்… பார்த்தாலே போதை ஏற்றும் கவர்ச்சியில் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

இடையழகு தெரிய மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, ஒரே நாளில் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் ரம்யா பாண்டியன். இவர் டம்மி டப்பாசு படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும்,  ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகித் தேசிய விருது பெற்ற ஜோக்கர் படம் தான் இவரை ரசிகர்களால் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாற்றியது.


இப்படத்தின் வெற்றி, இவரின் சினிமா கேரியரை தூக்கி நிறுத்தும் என எதிர்பார்த்த நிலையில், இதைத் தொடர்ந்து வெளியான ‘ஆன் தேவதை’ படு ஃபிளாப்பாக மாறியது. எனவே மீண்டும் கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளுக்குக் கொக்கி போடத் துவங்கினார்.

மேலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க, விஜய் டிவி பிளாட் ஃபாமை பக்காவாகப் பயன்படுத்தி கொண்ட ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5, மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு… பைனல் வரை வந்தாலும், இவரலால் டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெறமுடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், மிகவும் கவனமாகக் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதத்தில், புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்போது பஞ்சு மிட்டாய் நிறத்தில்… சும்மா பளீச் எனப் பொங்கும் அழகில் கோட் சூட் அணிந்து, கிக் ஏற்றும் லோ ஆங்கிளில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோஸ், தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *