Ramya Pandian:படுக்கை அறையில்..கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்சிய ரம்யா பாண்டியன் போஸ்!

Advertisements

நடிகை ரம்யா பாண்டியன், மிதமான மேக்கப்பில்… தனக்கு பிடித்த சில Snap Shot புகைப்படங்களை வெளியிட, அவை ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில், எப்படியும் நிலையான இடத்தைப் பிடித்து விட வேண்டும் என… போராடி வருபவர் தான் திருநெல்வேலி பொண்ணு ரம்யா பாண்டியன். இவரின் சித்தப்பா அருண் பாண்டியன் ஒரு நடிகர் என்பதாலும், தயாரிப்பாளர் என்பதாலும் சிறு வயதிலேயே ரம்யாவின் மனதில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை விதைக்கப்பட்டுவிட்டது.

அப்பாவின் தொழில் ரீதியாக, சென்னைக்கு வந்து செட்டில் ஆனது ரம்யா பாண்டியனின் குடும்பம். சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது தன்னுடைய நண்பர்களின் குறும்படங்களில் நடித்த இவருக்கு டம்மி டப்பாசு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்தப் படம் படு தோல்வியைச் சந்தித்ததால், ரசிகர்கள் மத்தியில் கண்டுகொள்ளப்படாத கதாநாயகியாக இருந்த ரம்யா பாண்டியன்… இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ‘ஜோக்கர்’ திரைப்படம் இவருக்குச் சிறந்த அறிமுக படமாக அமைத்தது. ஆனால் இதைத் தொடர்ந்து நடிகர் சமூத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த ‘ஆண் தேவதை’ அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தபோதே, அதிரடியாக.. விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

தமிழை கடந்து, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளுக்கும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ரம்யா பாண்டியன் கைவசம் தற்போது, இடும்பன்காரி என்கிற படம் மட்டுமே உள்ளது. அவ்வப்போது பட வாய்ப்புகளை ஈர்ப்பதற்கு, விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்டை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, தன்னுடைய அன் சீன் போட்டோஸ் சிலவற்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். மிதமான மேக்கப்பில், செல்ல நாய் குட்டியுடன் பெட்டில் கன்னத்தோடு கன்னம் வைத்து இவர் கொடுத்துள்ள போஸ் செம்ம ஹை லைட். இந்தப் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *