
பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் மாநில இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகனை நியமனம் செய்துள்ளார்.
திண்டிவனம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ராமதாஸ், பாமக மாநில இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான நியமன உத்தரவை ராமதாசும், அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தியும் தமிழ்குமரனிடம் வழங்கினர். இதில், இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்க்குமரன் ஜி.கே.மணியின் மகன் ஆவார் என குறிப்பிடத்தக்கது.
