டிடி நெக்ஸ்ட் லெவல் படப்பிடிப்பு நிறைவு!

Advertisements

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்பட இடப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.

அதில் படம் மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை குறிக்கும் விதமாகப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *