Rajiv Gandhi Government General Hospital: காலில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்..அரசு மருத்துவமனையின் அலட்சியம்?

Advertisements

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் காலில் சிறு காயங்கள் ஏற்பட்ட காரணத்தால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இன்று காலை மரணம் அடைந்தார் இச்சம்பவம் அங்கு உள்ள  நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலில் காயம் என 20.4.2024 அன்று நோயாளியான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சத்யா (26)   என்பவருக்குத் திருமணம் நடந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், திடீரென இடது காலில் காயம் அடைந்த காரணத்தால் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் அவசர சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 22.4.2024,  இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மேலும் இதைத் தொடர்ந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாக நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது,

மேலும் சமீபத்தில் சிறு குழந்தையின் கையில் அரசு மருத்துவர்கள் சிகிச்சை முறையாகச் செய்யாததால் சிறு குழந்தையின் இரு கைகளும் அகற்றப்பட்டு உயிரிழந்தும் பின்னர் இதைப் போன்று மற்றொரு  சம்பவம்குறித்து விளையாட்டு வீரர் ப்ரியா என்பவள் தொடை வலியெனச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால்   தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் உயிரிழந்தார்.

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் வேறு பிரச்சனையைக் காட்டி அரசு மருத்துவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் சுகாதாரத்துறை திகழ்ந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோயாளிகள் அதிக அளவில் அலக்கழிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *