அசாமில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது..


