Rahul Gandhi : மௌனம் காப்பது ஏன்? மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி.?

 அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி: அதானி குழும முறைகேடுகள்குறித்து புதிதாக வந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்?. அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி விவகாரம்குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்?.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிகாட்டியுள்ளது. அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும்; இது எப்படி? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Rahul Gandhi | Narendra Modi | Mukesh Ambani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *