கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெரும் ராகுல்காந்தி !

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல்காந்தி வந்திருந்தார். அவர் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்த உம்மன்சாண்டி இறுதிச் சடங்கில் நேற்று கலந்து கொண்டார்.

அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார். அதன்படி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரசித்தி பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் தங்கியிருந்து அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார். அந்த வைத்திய சாலையின் தலைமை மருத்துவ நிபுணர் மாதவன்குட்டி வாரியரன் மேற்பார்வையில் ராகுல் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உம்மன்சாண்டியின் இறுதிசடங்கில் பங்கேற்று விட்டு, நேற்று இரவிலேயே அவர் கேட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு சென்றார். அங்கு அவருக்கு இன்று முதல் சிசிச்சை அளிக்கப்படுகிறது. வருகிற 29-ந்தேதி வரை ராகுல்காந்தி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *