ISRO: விண்வெளித்துறை பற்றி தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிரதமர்

ISRO

 

திருவனந்தபுரம்:

சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு நேற்று வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நம் நாடு அதிக கிரகங்களுக்கு இடையோன பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது. விண்வெளித்துறையின் விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையைப் பற்றி நீண்ட கால தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

எங்களைப் பொறுத்தவரை சாப்ட் லேண்டிங் மட்டுமல்ல சந்திரயான்-3ன் முழு அம்சங்களும் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. இதனால் முழு நாடும் எங்களுக்கு ஆதரவை வழங்குகிறது. இதேபோல் எங்களது எதிர்கால முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். நாங்கள், சந்திரன், செவ்வாய் அல்லது வீனஸ் ஆகியவற்றுக்கு அதிகமாக பயணிக்க முடியும். ஆனால் அதற்கான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிக முதலீடும் இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *