R Praggnanandhaa: பாராட்டிய முதல்வர்!

R Praggnanandhaa | M.K. Stalin

உலக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்…

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 24ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார்.

பேச்சு பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விஸ்வநாதன் ஆனந்துக்கு பின்னர் உலகக்கோப்பை செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர்.

உங்களின் வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள் பிரஞ்னானந்தா. இந்திய செஸ் போட்டி மிகச்சிறப்பானது என இந்த ஆட்டம் காட்டியது. மேலும், அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாகத் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *