மாநில அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்கக் கோரி வருகிற ஜனவரி 8ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாகத் தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக முத்தரசன் தெரிவித்தார்.
சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா நல்லகண்ணு அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாளும், அக்கட்சியின் 99 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கட்சி கொடியை ஏற்றித் துவக்கி வைத்தார். இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய, இரா நல்லகண்ணுஎன்னுடைய பாராட்டு விழா ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி.99 வயதுஎன்பது சாதாரண விஷயம் தான், சோகமான நேரத்தில் இந்த நிகழ்ச்சி தேவையற்றது.
தென் தமிழக பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
நூறாண்டுகளுக்குப் பிறகு பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, மாநில அரசு சார்பாக வெள்ள நிவாரணங்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்குச் சிறப்பாக வழங்கி வருகிறது.ஒன்றிய அரசிடம் மாநில அரசு சார்பில் தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடியிடம் நேரிலே சந்தித்து வெள்ள பாதிப்பு நிவாரண தொகையாக ரூபாய் 21,652 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விண்ணப்பத்தை வழங்கினார், ஆனால் ஒன்றிய அரசாங்கம் இந்த நிமிடம்வரை ஒரு பைசா கூட வழங்க வில்லை. இந்த வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் வலியுறுத்துகிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு என்பது அவர் வகிக்கின்ற பதவிக்குத் தகுதியற்ற பேச்சாக இருந்தது.இதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி எட்டாம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக மாநில அரசு கேட்ட நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என முத்தரசன் தெரிவித்தார்.


