Punjab: பயங்கரவாதிகள் தாக்குதல்!

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது இன்று அதிகாலை பயங்கர ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தரையிறங்கிய மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் விமானப் படையின் மியான்வாலி பயிற்சி விமான தளம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதாகவும், அப்போது நடந்த தாக்குதலில் எதிரிகள் மூன்று பேரைக் கொன்று  மேலும் தாக்குதல் நடத்துவதை முறியடித்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலின் போது, ஏற்கனவே தரையிறங்கிய மூன்று விமானங்கள் மற்றும் ஒரு எரிபொருள் பவுசர் ஆகியவற்றிற்கும் சில சேதங்கள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று தீவிரவாதிகள் தளத்திற்குள் நுழையும் போதே அவர்களை செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் மற்ற  மூன்று பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவப் பயிற்சி அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *