புதுச்சேரி பரதாலயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி பரதாலயாவில் நாட்டியம் பயின்ற வெங்கடாசலம், மணிமொழி தம்பதியினரின் மகள் கவிதாவின் அரங்கேற்றம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. நாட்டியப் பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணன், இயக்குநர் பிரீத்தா ஆகியோர் தலைமையில் நடந்த அரங்கேற்றத்தில் மாணவி கவிதா சிறப்பாகப் பரதநாட்டியம் ஆடிப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இதில் லூர்து சாந்தி, சூரிய நாராயண மூர்த்தி, புதுச்சேரிப் பல்கலைக்கழக நடனத்துறைத் தலைவர் விசித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவி கவிதாவின் நடனத் திறமையைப் பாராட்டிப் பரிசுகளும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினர்.


