
கோவில்களில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும், மேலும் புது நியமனங்களையோ, இட மாற்ற உத்தரவுகளையோ பிறப்பிக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, இதுகுறித்து இன்னும் ஒரூ வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அனைத்து மதத்தினரில் சிலர் ஆகம பயிற்சி கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று, முறையாகப் பயிற்சியும் பெற்று அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
இதில் கரு சுமக்கும் பெண்களும் சுருவறை செல்லலாமென உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 பெண்கள் சில பிசித்தி பெற்ற கோவில்களைத் தேர்வு செய்து விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளை மீறி, அர்ச்சகர் மற்றும் ஆகமம தொடர்பான பணிகளில் நியமனம் செய்வதை ஏதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டிலேயே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நியமன ஆவணங்களை எதிர்த்து டி, ஆர், ரமேஷ் ஏன்பவர் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், ஆகம கோவில்களில், ஆகம விதிப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 2022-ல் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் படி கோவில்களில் தக்கார் அல்லது அறங்காவலர் தான் பணி நியமனம் செய்ய வேண்டுமே தவிர, அறநிலையத்துறை செய்யத் தடை செய்தது.
இதன் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம், மற்றும், ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் கமிஷனர் கோபல் சாமியை நியமிக்க உயர்நீதி மன்றம் அனுமதித்த நிலையில், சக்திவேல் முருகன் என்பவரைத் தமிழக அரசு சார்பில் ஒரு வருடத்திற்குப் பிறகு பரிந்துரைக்க, அதற்குச் சென்னை உயர்நீதி மன்றம் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனிடையில் ஆகம கமிட்டி இறுதி செய்யப்படாததால், அறனிலயத்துறை சில கோவில்களில் தொடங்கப்பட்ட புதிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில், படித்த ஆடவர் மற்றும் மகளிரை சேர்க்கை கொடுத்து அவர்கள் பயிற்சி பெற முற்பட்டது.
இவை அனைத்தும் ஆகம விரோதங்கள் என்று ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மூன்று பெண்கள் ஊடகங்களில் பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சைவ சிவாச்சாரியார்கள் கொடுத்த வழக்கு விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்ற நிலையில், கோவில்களில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும், மேலும் புது நியமனங்களையோ, இட மாற்ற உத்தரவுகளையோ பிறப்பிக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, இதுகுறித்து இன்னும் ஒரூ வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.


