அமைதியை நிலைநாட்டுவதுக்கு அதிபர் டிரம்ப் முன்னுரிமை – மார்கோ ரூபியோ பேச்சு.!

அமைதியை நிலைநாட்டுவதற்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைதியை நிலைநாட்டுவதற்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னுரிமை அளிப்பதாகவும் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தர்களாக பணியாற்றுவதை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மார்கோ ரூபியோ, உலகின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது என்றும் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த தங்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *