Pongal Festival 2024: பொங்கல் விழாவில் மோதல்.. ஒருவருக்கு கத்தி குத்து!

Advertisements

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் பகுதியில் பொங்கல் விழாவில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் 18 ஆம் தேதி காணும் பொங்கலும்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது பாரம்பரிய வழக்கம்.

தமிழகத்தில் தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வைத்து மகிழ்ச்சியை கொண்டாடி வந்தனர்,

அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது,

அப்போது அங்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இரவு இரு தரப்பினரிடையே திடீரென ஏற்பட்ட மோதலால் ஒருவர் மற்றொருவரை கத்தியால் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவித் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *