
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு பணிஅண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரில் உள்ள முக்கியமான பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.க்கு வரும் பணியாளர்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, இரவு நேரத்தில் மற்றொரு மாணவருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாகச் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துச் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து ஞானசேகரன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்கச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாகக் கைது செய்ய முயன்றபோது போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற ஞானசேகரனுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஞானசேகரன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயும் நுழைவு வாயில்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளிநபர்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களை அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். அதேபோல, ஏதாவது உடைமைகள் கொண்டு வந்தால் அவற்றையும் சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர். போலீஸ் கெடுபிடியால் அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது.


